ஐந்து கடமைகளில்…..

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி இத்தரையோர்க் குரைத்த போதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின் சொத்தாக கிடைத்திட்ட வேதம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து நலமுடன் உடலும் பொருளும் இருந்தால் ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை மறையாய் கொண்டது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட நெறியாய் திகழ்வது இஸ்லாம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி கண்ணியம் காத்திடும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு புண்ணிய வழி சொல்லும் மார்கம் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள் தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்