சொன்னால் முடிந்திடுமோ..

சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு… வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு விண்ணகத்துத் தாரகையும் வெட்க்கப்படும் பார்த்து விட்டு என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்… அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும் பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும் என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்… திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும் அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும் என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…