இறைவனிடம் கையேந்துங்கள்…
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை.
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாது கருணை யுள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலை கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளி தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவ ங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லி காட்டுங்கள்
அன்பு நோக்க தருகவென்று அழுது கேளுங்கள்
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
அலையின் மீதும் கடலின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்
உலகம் இறைவனின் சந்தை மடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம்
உரிய இடம்...
கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
களைப்பாற இங்கே தங்கிடுவான்
உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்
இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை
பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
புரியாதவன் அறிவு தெளிவதில்லை
தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
ஐந்து கடமைகளில்…..
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
அத்தனையும் சொர்கத்தின்
சங்கை மிகு முத்திரைகள்
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
அத்தனையும் சொர்கத்தின்
சங்கை மிகு முத்திரைகள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
இத்தரையோர்க் குரைத்த போதம்
வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
இத்தரையோர்க் குரைத்த போதம்
சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
சொத்தாக கிடைத்திட்ட வேதம்
சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
சொத்தாக கிடைத்திட்ட வேதம்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து
நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
மறையாய் கொண்டது இஸ்லாம்
இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
மறையாய் கொண்டது இஸ்லாம்
முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
நெறியாய் திகழ்வது இஸ்லாம்
முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
நெறியாய் திகழ்வது இஸ்லாம்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
கண்ணியம் காத்திடும் மார்கம்
உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
கண்ணியம் காத்திடும் மார்கம்
மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
புண்ணிய வழி சொல்லும் மார்கம்
மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
புண்ணிய வழி சொல்லும் மார்கம்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
அத்தனையும் சொர்கத்தின்
சங்கை மிகு முத்திரைகள்
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
அத்தனையும் சொர்கத்தின்
சங்கை மிகு முத்திரைகள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
அல்லாவை நாம் தொழுதால்…
அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...
அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
அல்லாவை நாம் தொழுதால்...
பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
அல்லாவை நாம் தொழுவோம்...
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
அல்லாவை நாம் தொழுவோம்...
இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..
நம் கன்மனியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்.
மாதவ தூதர் முஹமது நபியின் மகளாக வந்து பிறந்தார்
போதில்லாத முழுமதியெனவே குலகொடியாக வளர்ந்தார்
தந்தையின் சொல்லை சிந்தையில் யேந்தி சங்கை வள்ர்மங்க்கையானரே..
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
அன்னை கதிஜா நன்னைய பண்பை அகமதில் தாங்கி சிறந்தார்
கன்னில் கருனை கையில் தானம் கல்பில் இறைவேதம் சுமந்தார்
செல்வத்தை மறுத்து வறுமையை ஏற்று சீமாட்டியாகவெ வாழ்ந்தாரே..
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
வானவர் வாழ்த்த யாவரும் போற்ற வீரர் அலியை மணந்தார்
தீன் குல பெண்கள் துறைவை ஒழிக்க சிறப்புடன் இல்லறம் புகுந்தார்
கணவர் அலியை கன்னுக்குள் வைத்து கணிவாய் பணிவிடை செய்தாரெ..
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
சொர்க்கத்தின் நிழ்ழாய் கணவரை மதித்து சோபன வாழ்வில் மிதந்தார்
அருமை மைந்தர்கள் ஹசன் ஹுசைனின் அன்பு தாயகி மகிழ்ந்தார்
புவன தூதர் தந்தை முஹம்மதை பொக்கிசமாகவே மதித்தாரே...
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
அராபாத் வெளியில் இறைவன் தூதை அண்ணல் நபி முடித்தார்கள்
இறைவன் அழைப்பை ஏற்றே நபிகள் இம்மை வாழ்வை விடுத்தார்கள்
தந்தையை இழந்த செல்வி பாத்திமா தனலில் குழுவாய் துடித்தார்
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
எம்பெருமானார் இதயமாகவே இலங்கிய மாதர் திலகம்
தம்முடன் மெலிந்து கன்னொலி மங்கி சருஹென மாறிபோனார்
விந்தைகள் சூலும் இப்புவிமீது விரைந்தே கழிந்தன மாதங்கள்
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
இம்மையின் வாழ்வு முடிவதை அன்று இதயத்தினலே உணர்ந்தார்
தம்முடன் குளித்து கஃபன் உடை தரித்து கணவரின் மார்பில் சரிந்தார்
கன்னிர் முத்துகள் கன்னத்தில் உருள கணவரை கணிவுடன் பார்த்தாரே..
கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்..(2)
வல்லோன் நல்கிய அர்சின் உயிரை விடைகொடுத்து அனுப்புங்கள் என்றார்
பிள்ளை செலவங்கள் ஹசன் ஹுசயினை பிடித்தவர் கையில் கொடுத்தார்
அல்ஹம்ந்துலில்லாஹ் என்றே கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே..அகிலத்தின் வாழ்வை முடித்தாரே
இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்
இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்
இன்னா நிலாஹி வைன இலைஹி ராஜிவூன்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்
மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே
ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம்
மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில்
தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்
வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே
தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்
கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த
நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம்
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...
சொன்னால் முடிந்திடுமோ..
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு
விண்ணகத்துத் தாரகையும் வெட்க்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை
அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…
அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்
பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை
திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…
திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்
அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை
சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…
Subscribe to:
Posts (Atom)